தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கல்வி மாணவர் சாதனை

கல்வி மாணவர் சாதனை

கல்வி மாணவர் சாதனை


UPDATED : நவ 08, 2026 11:36 PM

ADDED : நவ 08, 2026 07:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 11:36 PM ADDED : நவ 08, 2026 07:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: நகரி கல்வி இன்டர்கான்டினென்டல் பள்ளி மாணவர் தருண் 14, எம்.யூ.20., சர்வதேசவாய்ப்புகள் உச்சி மாநாட்டில் ஆசிய அளவில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் இந்துாரில் எம்.யூ.20., மாநாடு நடந்தது. மாணவர்களின் தலைமைத்துவ பண்பு, பேச்சாற்றல், சிந்தனைத்திறன், சர்வதேச பிரச்னைகள் குறித்த புரிதல், அவற்றிற்கு தீர்வு காணும் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.

இதில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மாணவர்கள் தங்கள் திறமை, ஆளுமை திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் பங்கேற்ற 9ம் வகுப்பு மாணவர் தருண் தொடர்ந்து 3 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு விருதுகள், பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் மதுரை மாணவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக விருது பெறுவது குறிப்பிடத்தக்கது. பள்ளித் தலைவர் செந்தில்குமார் முதல்வர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் தருணை பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us