/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விபத்து ஏற்படுத்தும் பாலமேடு தார்ரோடு
/
விபத்து ஏற்படுத்தும் பாலமேடு தார்ரோடு
ADDED : அக் 10, 2025 03:13 AM

பாலமேடு: பாலமேடு கருப்பன் கண்மாய் கரைரோடு அலைகோடுகளாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
பாலமேட்டில் இருந்து இக்கண்மாய் கரை ரோடு வழியாக மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, முடுவார்பட்டி, சரந்தாங்கி பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் செல்கின்றனர். அதிக எடையுடன் குவாரி லாரிகள் செல்வதால் கண்மாய் கரை தார்ரோட்டில் அலை அலையாக, கோடுகள் விழுந்துள்ளது.
இந்த கோடுகளில் சிக்கும் டூவீலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றன. கண்மாய் ஓரத்தில் மட்டுமே தடுப்புகள் உள்ளது, மற்றொருபுரத்தில் தடுப்பு இல்லாததால் தடுமாறும் வாகனங்கள் பள்ளங்களுக்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் தடுப்பு அமைக்கவும், பழுதடைந்த ரோட்டை சீரமைக்கவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.