தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தானியங்களால் விபத்து அபாயம்

 தானியங்களால் விபத்து அபாயம்

 தானியங்களால் விபத்து அபாயம்


ADDED : பிப் 07, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் பகுதி ரோடுகளில் சோளம், மக்காச்சோளம், குதிரைவாலி உட்பட தானியங்கள் உலர்த்தப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது.

தற்போது இப்பகுதியில் அறுவடை பணிகள் துவங்கி உள்ளன. தானியங்கள் உலர்த்தப்பட வேண்டும்.

பேரையூர்- உசிலம்பட்டி, வத்ராப், டி. கல்லுப்பட்டி, எம்.சுப்புலாபுரம், கள்ளிக்குடி, விருதுநகர் ரோடுகளை விவசாயிகள் கதிர்களை உலர்த்த பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் உலர்த்துவதற்கு களங்கள் கிடையாது. எனவே ரோடுகளில் கற்களை வைத்து போக்குவரத்தை தவிர்த்து அருகில் உலர்த்துகின்றனர்.

வாகனங்கள் சென்றுவரும் நிலையில் இது போன்ற நடவடிக்கையால் விபத்துகள் நடக்க ஏதுவான நிலை ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையினர் இது போன்ற செயல்களை தடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us