ADDED : ஜூலை 23, 2025 02:33 AM

மதுரை : தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 41வது சப்ஜூனியர் பிரிவு, 51 வது ஜூனியர் பிரிவுக்கான மாநில நீச்சல் போட்டி சென்னையில் நடந்தது. மதுரை நீச்சல் வீராங்கனை ரோஷினி குழு 1 பிரிவில் பங்கேற்றார். 50மீட்டர், 100 மீ, 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவுகளில் தங்கப்பதக்கம்,100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம், 200 மீட்டர் ப்ரீஸ்டைல் வெள்ளி என பதக்கங்களை வென்றார்.
குரூப் 3 பிரிவில் பங்கேற்ற இமையா 100 மீட்டர், 200 மீ, பட்டர்பிளை பிரிவில் தங்கம், 200 மீட்டர் ஐ.எம்., பிரிவில் வெள்ளி,100 மீட்டர், 200 மீ., பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கல பதக்கங்களை வென்றார். இருவரும் தேசிய நீச்சல் போட்டிக்கு தேர்வு பெற்றனர். வாட்டர் போலோ தேசிய போட்டிக்கான சீனியர் பிரிவில் மதுரை நீச்சல் வீரர்கள் ஆகாஷ், சப் ஜூனியர் பிரிவில் நவநீதகிருஷ்ணன் தேர்வாகினர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், விளையாட்டு அலுவலர் ராஜா, நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின், இணைச்செயலாளர் கண்ணன் பாராட்டினர்.