ADDED : டிச 13, 2024 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தாய்லாந்து நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டி நடந்தது.
இதில் மதுரை லேடிடோக் கல்லுாரி மாணவி அமுல்யா ஈஸ்வரி 800, 1500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு தங்கப்பதக்கம், 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார். மதுரை அரசு சட்டக் கல்லுாரி மாணவர் வருண் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம், வட்டெறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.
அவர்கள் கலெக்டர் சங்கீதாவிடம் வாழ்த்து பெற்றனர். உதவி கலெக்டர் (பயிற்சி) வைஷ்ணவி பால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாற்றுத்திறனாளிகள் பயிற்சியாளர் ரஞ்சித்குமார் பாராட்டினர்.