sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எப்.பி.ஓ., நிறுவனங்களுக்கு அக்மார்க் தரச்சான்றிதழ் கட்டணம் ரூ.5000 ல் இருந்து ரூ.500 ஆக குறைப்பு

/

எப்.பி.ஓ., நிறுவனங்களுக்கு அக்மார்க் தரச்சான்றிதழ் கட்டணம் ரூ.5000 ல் இருந்து ரூ.500 ஆக குறைப்பு

எப்.பி.ஓ., நிறுவனங்களுக்கு அக்மார்க் தரச்சான்றிதழ் கட்டணம் ரூ.5000 ல் இருந்து ரூ.500 ஆக குறைப்பு

எப்.பி.ஓ., நிறுவனங்களுக்கு அக்மார்க் தரச்சான்றிதழ் கட்டணம் ரூ.5000 ல் இருந்து ரூ.500 ஆக குறைப்பு


ADDED : செப் 05, 2025 03:58 AM

Google News

ADDED : செப் 05, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:'மதுரை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (எப்.பி.ஓ.,) ரூ.500 கட்டணத்தில் அக்மார்க் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது' என, வேளாண் வணிகம், விற்பனை துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

அரிசி, மளிகைப் பொருட்கள், நெய், தேன், கடலைமாவு, கோதுமை மாவு, கேழ்வரகு மாவு உட்பட 248 வகை அத்தியாவசிய உணவுப் பொருட்கள், தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டு அக்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. தரமான பொருட்களை அக்மார்க் தரச் சான்று பெற்று உணவு உற்பத்தியாளர்கள் விநியோகிக்கின்றனர்.

தமிழகத்தில் 903 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும், மதுரையில் 38 நிறுவனங்களும் விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை பெற்று மதிப்பு கூட்டிய உணவுப்பொருளாக விற்பனை செய்கின்றன. குறிப்பாக சிறுதானியம், பாரம்பரிய அரிசி, பயறு வகைகள், சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், மதிப்பு கூட்டிய தானியபொருட்களை தயாரிக்கின்றனர். இவற்றுக்கான தர நிர்ணயம் செய்வதன் மூலம் நுகர்வோர் வாங்கி பயன்படுத்துவது அதிகரிக்கும். வழக்கமாக அக்மார்க் தரச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.5000.

எப்.பி.ஓ., நிறுவனங்கள் அக்மார்க் தர சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை ரூ.500 ஆக குறைத்து வேளாண் விற்பனையாக்கம் மற்றும் ஆய்வு இயக்குநரக மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது. எப்.பி.ஓ., நிறுவனங்கள் இதை பயன்படுத்தி தரச்சான்றிதழ் பெறலாம் என்றார். இதுதொடர்பாக மதுரை கே.கே.நகர் மாநில அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வக வேளாண்மை அலுவலர்களை (96292 88369) அணுகலாம்.






      Dinamalar
      Follow us