/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிமன்ற புறக்கணிப்பு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஆக 20, 2025 06:58 AM
மதுரை : சட்டவிரோதமாக தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சில கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தடை கோரி மனுக்கள் தாக்கலாகின.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிலுள்ள விதிவிலக்குகளை தவிர்த்து பிற காரணங்களுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடக்கூடாது.
ஒரு நாள் மட்டும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக இருந்தால் உயர்நீதிமன்றம் எனில் தலைமை நீதிபதி, மாவட்ட நீதிமன்றம் எனில் முதன்மை நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி புறக்கணிப்பில் ஈடுபட்டால் சட்டவிரோத போராட்டமாக கருதப்படும்.
சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் மீது தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டால் வழக்கறிஞர் தொழில் செய்வதிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தர விட்டனர்.