நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: மதுரை தமிழ்நாடு வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளங்கலை இறுதியாண்டு மாணவி ஸ்ருதிகா கிராம பணி அனுபவ திட்டத்தில் வாடிப்பட்டி பகுதியில் தங்கி பயிற்சி பெறுகிறார்.
செமினிப்பட்டி பகுதியில் உள்ள வாழை விவசாயிகளுக்கு போலி தண்டு பொறி தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார். வாழை மரத்தை தாக்கும் கூன் வண்டை கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு நல்ல மகசூலை பெற உதவும் என்பதை செயல்முறையில் விளக்கினார்.

