/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கிரைண்ட்ர் கே' செயலியை முடக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
'கிரைண்ட்ர் கே' செயலியை முடக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
'கிரைண்ட்ர் கே' செயலியை முடக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
'கிரைண்ட்ர் கே' செயலியை முடக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 21, 2024 05:47 AM

மதுரை : 'கிரைண்ட்ர் கே' அலைபேசி செயலி சட்டவிரோத நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதால் அதை முடக்க பரிசீலிக்கக்கோரி மத்திய அரசுக்கு போலீசார் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த ஒருவரும், மற்றொருவரும் 'கிரைண்ட்ர் கே ஆப்'(செயலி) உறுப்பினர்கள். பாலியல் விருப்பங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் இச்செயலி மூலம் மற்றொரு நபரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு நாங்குநேரி நபர் வரவழைத்தார். பாலியல் வன்கொடுமை செய்து, அவரது செயின் மற்றும் கிரெடிட் கார்டை பறித்துச் சென்றார். கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1 லட்சத்து15 ஆயிரத்தை எடுத்ததாக நாங்குநேரி நபர் மீது மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான அந்நபர் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி உத்தரவு: மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. நாங்குநேரி நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். மூன்றடைப்பு போலீசில் 4 வாரங்களுக்கு ஆஜராக வேண்டும்.
செயலியிலிருந்து வெளியேறுவேன்; எவ்விதமான சமூக ஊடகத்திலும் ஒரு பகுதியாக இருக்கமாட்டேன் 'என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அவர் தானாக முன்வந்து தனது அலைபேசியை போலீசில் ஒப்படைக்க வேண்டும். புதிய அலைபேசி வாங்கினால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
'கிரைண்ட்ர் கே' அலைபேசி செயலி சட்டவிரோத நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதை முடக்க பரிசீலிக்கக்கோரி மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு விசாரணை அதிகாரி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

