/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., ஜாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்துமா நடிகை கஸ்துாரி கேள்வி
/
தி.மு.க., ஜாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்துமா நடிகை கஸ்துாரி கேள்வி
தி.மு.க., ஜாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்துமா நடிகை கஸ்துாரி கேள்வி
தி.மு.க., ஜாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்துமா நடிகை கஸ்துாரி கேள்வி
ADDED : அக் 13, 2025 05:13 AM
அவனியாபுரம் : மதுரை விமான நிலையத்தில் நடிகை கஸ்துாரி கூறியதாவது:
தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. அதற்கு ஆளும் தி.மு.க., விற்குதான் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தி.மு.க., ஆட்சியை நன்றாக நடத்தியிருந்தால் பா.ஜ., வளர்ந்து இருக்காது. தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு நாளும் குற்றங்களும் கொலைகளும் நடப்பதால் வேறு வழியின்றி மக்கள் பா.ஜ., வை ஆதரிக்கின்றனர்.
வாரிசு அரசியலுக்கு மாற்றாக பா.ஜ., வருகிறது. பா. ஜ., -- அ.தி.மு.க., வலுவான கூட்டணியாக உள்ளது. மேலும் பல புதிய கட்சிகள் கூட்டணிக்கு வரப்போகிறார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதுதான் முதல் குறிக்கோள். எங்கள் கூட்டணியில் த.வெ.க., இணைய வேண்டும். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு முகமாக இந்த தேர்தலை சந்திக்க வேண்டும். தி.மு.க., கூட்டணிக்கு மட்டுமே சிறுபான்மையினர் ஓட்டுகள் விழும் என்ற கனவில் இருக்கிறார்கள்.
முறைத்ததால் வழக்கறிஞரை அடித்தோம் என்கிறார் திருமாவளவன். முறைத்தால் அடிப்பீர்களா.
ஜாதி பெயரை அழித்துவிட்டால் ஜாதியை ஒழித்து விடலாமா. ரோட்டில் உள்ள ஜாதி பெயர்களை தார் வைத்து அழித்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. ஜாதி அழிந்து விட்டதா.
ஜாதி பார்க்காமல் தி.மு.க., வினர் வேட்பாளரை நிறுத்த முடிகிறதா. ஜாதிக்கு யாரும் எதிரி கிடையாது. அதனால் வரக்கூடிய சமூக அநீதிகளுக்குதான் எதிரி. ஆணவக் கொலை நடக்கும்போது உங்களின் ஆர்வம் எங்கே போனது என்றார்.