/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
‛வீடு வாங்க ஏராளமான வாய்ப்புகள் கண்காட்சியில் நடிகை சுகாசினி தகவல்
/
‛வீடு வாங்க ஏராளமான வாய்ப்புகள் கண்காட்சியில் நடிகை சுகாசினி தகவல்
‛வீடு வாங்க ஏராளமான வாய்ப்புகள் கண்காட்சியில் நடிகை சுகாசினி தகவல்
‛வீடு வாங்க ஏராளமான வாய்ப்புகள் கண்காட்சியில் நடிகை சுகாசினி தகவல்
ADDED : பிப் 03, 2025 05:39 AM

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான 'கிரடாய்' சார்பில் 'பேர்புரோ பிராப்பர்ட்டீஸ்' கண்காட்சி 3 நாட்கள் நடந்தது.
இறுதிநாளான நேற்று மேயர் இந்திராணி பொன்வசந்த், கிரடாய் தமிழக தலைவர் இளங்கோவன், மதுரை சேர்மன் ராமகிருஷ்ணா, தலைவர் முத்துவிஜயன், செயலாளர் யோகேஷ், பொருளாளர் ஜெயகுமார் பங்கேற்றனர்.
இதில் கிரடாய் விளம்பர துாதர் நடிகை சுகாசினி பேசியதாவது: மதுரை என்றாலே வீரம். மதுரைக்கும் எனக்கும் உள்ள உறவு அளப்பரியது. இங்கு கல்லுாரியில் படித்த நாட்கள் மறக்க முடியாதது. பெண்கள் எந்த வேலையையும் துரிதமாக, சரியாக செய்வர். வீடுவாங்க நினைக்கும் குடும்பத்திற்கும், அவர்கள் தேவைக்கேற்பவும் கட்டமைக்கும் நிறுவனத்திற்குமான உரையாடல்தான் உலகிலேயே மிகச்சிறந்தது. அன்றைய காலத்தில் வீடுகட்டுவது, டாக்குமென்டுகள் தயார் செய்வது மிகவும் கடினமானதாக இருந்தது. இன்று நம்பகமான முறையில் கனவு இல்லங்களை உருவாக்குதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றார்.
மூன்று நாள் கண்காட்சியில் வாடிக்கையாளர்கள் ரூ.19.9 லட்சம் முதல் ரூ.2.50 கோடி மதிப்புள்ள வீடுகள், ரூ.3 லட்சம் முதல் வீட்டுமனைகளை தேர்வு செய்தனர். பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்திருந்தன. குலுக்கல் முறையில் பார்வையாளர் பரிசாக ஜான், விஜயபாஸ்கர் ஆகியோருக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான பிளாட்கள் வழங்கப்பட்டன.

