/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.1.50 கோடியில் கூடுதல் கட்டடம்
/
ரூ.1.50 கோடியில் கூடுதல் கட்டடம்
ADDED : நவ 13, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மாநகராட்சி மண்டலம் 2ன் அருள்தாஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.50 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை அமைச்சர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், நகர்நல அலுவலர் (பொறுப்பு) பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் காமராஜ், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், முதன்மை மருத்துவ அலுவலர் கோதை, உதவி நகர்நல அலுவலர் அபிேஷக், கவுன்சிலர்கள் மகாலட்சுமி, கஜேந்திர குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

