/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
த.வெ.க., பொதுச்செயலாளராகிறார் ஆதவ் அர்ஜூனா ஆனந்த் ஓரங்கட்டப்படுகிறார்
/
த.வெ.க., பொதுச்செயலாளராகிறார் ஆதவ் அர்ஜூனா ஆனந்த் ஓரங்கட்டப்படுகிறார்
த.வெ.க., பொதுச்செயலாளராகிறார் ஆதவ் அர்ஜூனா ஆனந்த் ஓரங்கட்டப்படுகிறார்
த.வெ.க., பொதுச்செயலாளராகிறார் ஆதவ் அர்ஜூனா ஆனந்த் ஓரங்கட்டப்படுகிறார்
ADDED : அக் 26, 2025 04:46 AM
மதுரை: தேர்தல் சமயத்தில் மக்கள் பிரச்னைகளை விவாதிக்கவும், கட்சியை வலுப்படுத்தவும் ஆதவ் அர்ஜூனாவை பொதுச்செயலாளராக்க த.வெ.க., தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். பெயரளவில் செயல்படும் மாவட்ட செயலாளர்களையும் மாற்ற உள்ளார்.
த.வெ.க., ஆரம்பித்து 2 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், முதல் சட்டசபை தேர்தலை சந்திக்க இன்னும் விஜய்க்கு 5 மாதங்களே உள்ளன. தேர்தலை கணக்கிட்டே மாநில மாநாடு, மாவட்டந்தோறும் பிரசார பயணம் என மக்களை சந்தித்து வந்தார். கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒருமாதமாக வீடு, அலுவலகத்தில் முடங்கியுள்ளார். அதேசமயம் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் ஆலோசனை நடத்தியதுடன், மாவட்ட நிர்வாகிகளிடம் அவ்வப்போது வீடியோ காலில் பேசி வருகிறார்.
கட்சி ஆரம்பித்த போது இருந்த ஆர்வம், வேகம் தற்போது நிர்வாகிகளிடம் இல்லை என உணர்ந்த விஜய், சில மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜூனாவை பொதுச்செயலாளராக்க முடிவு செய்துள்ளார். தற்போதைய பொதுச்செயலாளர் ஆனந்த்திற்கு அமைப்பு செயலாளர் அல்லது தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்க உள்ளார். இவர்களோடு நிர்மல்குமார், அருண்ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்டோரின் பதவிகளையும், மாவட்டங்களில் செயல்படாமல் உள்ள செயலாளர்களையும் மாற்ற உள்ளார்.
டில்லி 'லாபி'யில் ஆதவ் அர்ஜூனா கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்று விஜய் சார்பாக சி.பி.ஐ., விசாரணை கேட்டு பெற்றது ஆதவ் அர்ஜூனா தான். 41 பேர் இறந்த விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜூனா தி.மு.க., அரசுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார். இது விஜய்க்கு பக்கபலமாக இருந்தது. ஆனந்த் பொதுச்செயலாளராக இருந்தாலும் கட்சி சார்பில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேட்டி கொடுக்கவோ, அறிக்கை விடவோ, குறைந்தபட்சம் 'எக்ஸ்' தளத்தில் கருத்து தெரிவிக்கவோ இதுவரை முன்வரவில்லை.
அவர் அரசியல்வாதி மாதிரி இல்லை; விஜய்க்கு எடுபிடியாகதான் உள்ளார். ஆனால் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து மக்கள் பிரச்னை குறித்து த.வெ.க., சார்பில் கருத்து தெரிவித்து வருவதுடன், தனது வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனம் மூலம் நெட்டிசன்கள் வழியாக சமூகவலைதளத்தில் தி.மு.க.,வுக்கு கிண்டலாக பதிலடி கொடுத்து வருகிறார். டில்லி 'லாபி', பணபலம், ஆளுமை திறன், பேச்சுத்திறமை போன்ற காரணங்களால் இவரை பொதுச்செயலாளராக்கினால் கட்சி வலுப்படும். தேர்தலில் கை கொடுக்கும் என விஜய் நம்புகிறார்.
போலி பூத் கமிட்டி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர்களில் பலர் இன்னும் கட்சிப்பணிகளை முழுமையாக செய்யவில்லை. ரசிகராகவே இருக்கின்றனர். பல மாவட்டங்களில் பூத் கமிட்டி அமைத்திருந்தாலும் அதில் பெரும்பாலானவை போலியாக உருவாக்கப் பட்டவை என விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போதுள்ள மாவட்ட செயலாளர்கள் ஆனந் த் மூலம் நியமிக்கப்பட்டவர்கள். ஆதவ் ஆர்ஜூனா பொதுச்செயலாளரானால் அவருக்கு இவர்கள் ஒத்துழைக்க தயங்குவார்கள் என்பதால், அவர்களுக்கு புதிய பொறுப்புகளை கொடுத்து ஆதவ் அர்ஜூனா கைகாட்டும் நபர்களை மாவட்ட செயலாளராக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு கூறினார்.

