ADDED : ஜூலை 21, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் லயன்ஸ் கிளப் ஆப் மதுரை ஆலவாய் அமைப்பின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு நேற்று நடந்தது. இந்த அமைப்பின் 2025 - 26க்கான புதிய நிர்வாகிகளாக தலைவர் சுந்தரராஜன், செயலாளர் மோகன், பொருளாளர் விஜயன்பாலாஜி, முதல் துணைத் தலைவர் அய்யாக்கனி, நிர்வாகி கணேஷ், உறுப்பினர் தலைவர் அசோகன், ஒருங்கிணைப்பாளர் அசோக்பாபு, மார்க்கெட்டிங் தலைவர் ராஜசேகர் பொறுப்பேற்றனர்.
லயன்ஸ் சங்க நிர்வாகி மணிகண்டன், மண்டலதலைவர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். மண்டல தலைவர் ஆதிமூலராஜன், முன்னாள் காபினட் பொருளாளர் மோகன்காந்தி, வாழ்த்தி பேசினர்.