/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க., மனிதசங்கிலி போராட்டம்
/
மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க., மனிதசங்கிலி போராட்டம்
மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க., மனிதசங்கிலி போராட்டம்
மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க., மனிதசங்கிலி போராட்டம்
ADDED : அக் 09, 2024 04:29 AM

மதுரை : மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க., சார்பில் மனிதசங்கலி போராட்டம் நடந்தது.
ஜான்சி ராணி பூங்கா முன் நகர் அ.தி.மு.க., சார்பில் நடந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா பேசியதாவது: மாநகராட்சி கூட்டத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா என அ.தி.மு.க., சார்பில் கேள்வி எழுப்பினோம். ஆனால் இல்லை என மறுத்தனர். பின் இரண்டு நாட்களில் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றனர். மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தான் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் ஹிட்லர் ஆட்சி போல் வரியை உயர்த்தியுள்ளனர். 1500 வணிக கட்டடங்கள் குடியிருப்புகளாக மாற்றி குறைவாக வசூலிக்கின்றனர். அந்த வகையில் ரூ.15 கோடி வரை வரிப்பாக்கி உள்ளது. அதை வசூலித்தாலே சொத்துவரியை உயர்த்த தேவை இருக்காது என்றார்.
திருப்பரங்குன்றம்
கிழக்கு மாவட்டம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசுகையில், ''சென்னையில் வான் சாகச நிகழ்ச்சிக்கு தி.மு.க., அரசு முறையாக திட்டமிடவில்லை. தி.மு.க., அரசு நிர்வாக திறமையற்றது என்பதற்கு இதைவிட சான்று வேறு ஏதும் இல்லை. கூட்ட நெரிசலில் ஐந்து பேர் இறந்ததை அரசியல் ஆக்க வேண்டாம் என அமைச்சர் சுப்பிரமணியம் சொல்கிறார். மரணத்தை வைத்து அரசியல் செய்தவர்கள் தி.மு.க., தான்'' என்றார்.
மேலுார்
எம்.எல்.ஏ., பெரிய புள்ளான் வரவேற்றார்.நகர் செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். அவைதலைவர் ராஜேந்திரன், பொருளாளர் அம்பலம், மேலுார் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மீனவரணி செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மனித சங்கிலி போராட்டத்தை துவக்கி வைத்தார்.
சோழவந்தான்
மேற்கு மாவட்டம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்து பேசுகையில், ''ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று முறை மின் கட்டணம் மட்டுமல்லாது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப் போவதாக கூறியுள்ளனர்.
இன்று மின் ரசீதை பார்த்தாலே மக்களுக்கு ஷாக்கடிக்கிறது.
தேர்தல் வாக்குறுதியை எதையும் நிறைவேற்றவில்லை. மெரினாவில் ஒரு பாட்டில் தண்ணீர் இருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று உயிரிழந்த உறவினர்கள் கூறினர். தொடர்ந்து மக்கள் மீது மெத்தனப்போக்கு கடைபிடித்து வரும் தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்'' என்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், எஸ்.எஸ். சரவணன், மாணிக்கம், கருப்பையா முன்னிலை வகித்தனர்.
உசிலம்பட்டி
நகர் செயலாளர் பூமாராஜா, நகராட்சி தலைவர் சகுந்தலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.