/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்
/
முதல்வருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்
முதல்வருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்
முதல்வருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விமர்சனம்
ADDED : டிச 25, 2024 05:12 AM
திருப்பரங்குன்றம் : 'முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது' என திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா விமர்சித்தார்.
அவர் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் 200 க்கும் மேலான இடங்களை கைப்பற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் முதல்வர் இவ்வாறு கூறுவது, அவருக்கு பயம் வந்துவிட்டதை காட்டுகிறது. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி இருந்தால் தேர்தலைப் பற்றி முதல்வர் பயப்பட தேவையில்லை.
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் 10 நாட்களாக தமிழக அமைச்சர்கள் பதிலே சொல்ல முடியாமல் பலரும் 'மிமிக்கிரி' செய்தனரே தவிர, யாரும் சரியான பதிலைக் கூறவில்லை. தி.மு.க.,வுக்கு வீழ்ச்சி துவங்கிவிட்டது. மதுரையில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அதற்கு வாய்ப்பு இல்லை என சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தெரிவித்து விட்டார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மதுரையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும்.
அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய விவகாரத்தில் அ.தி.மு.க., எதுவும் கருத்துக் கூறவில்லை என்கின்றனர். அதில் என்ன தவறு உள்ளது என நாங்கள் இன்னும் ஆராயவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பேசவில்லை என்றாலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாக பேசி உள்ளார்.
பழனிவேல்ராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது விரகனுார், அவனியாபுரம் அருகே இரண்டு உயர் மட்ட பாலங்கள் கட்டப்படுவதாக அறிவித்தனர். தற்போது அதனை ரத்து செய்துவிட்டனர். நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட, ரத்து செய்வதில்தான் அரசு கவனமாக உள்ளது. எதற்குமே லாயக்கற்ற அரசுதான் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி என்றார்.

