/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'நீட் விவகாரத்தில் அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுது'
/
'நீட் விவகாரத்தில் அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுது'
'நீட் விவகாரத்தில் அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுது'
'நீட் விவகாரத்தில் அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுது'
ADDED : மார் 04, 2024 05:56 AM
மேலூர்: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மேலுாரில் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது.
இதில் எம்.பி., சிவா பேசியதாவது: மகளிர் உதவி திட்டம் மூலம் தமிழகத்தில் மகளிர் அதிளவில் பயன் பெறுகின்றனர். பத்திர பதிவுத்துறையில் அரசுக்கு வரவேண்டிய தொகையெல்லாம் வேறு எங்கோ சென்று கொண்டிருந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி சிறப்பாக செயல்பட்டு அரசு கஜானாவிற்கு அந்த தொகையை கொண்டு சேர்த்துள்ளார்.
இதுவரை நடந்த தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வேண்டாம் என்று நடந்து வந்தது. தற்போது வரும் லோக்சபா தேர்தல் ஜனநாயக ஆட்சியா, சர்வாதிகார ஆட்சியா என்று நடக்கவுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக இந்தியாவில் தி.மு.க., மட்டுமே தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறது. நாட்டில் பண வீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றார். நகராட்சி தலைவர் முகமதுயாசின், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் குமரன், ராஜராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

