/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆமை வேகத்தில் தமிழக சுகாதாரத்துறை அ.தி.மு.க., குற்றச்சாட்டு
/
ஆமை வேகத்தில் தமிழக சுகாதாரத்துறை அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ஆமை வேகத்தில் தமிழக சுகாதாரத்துறை அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ஆமை வேகத்தில் தமிழக சுகாதாரத்துறை அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : நவ 12, 2024 05:25 AM
மதுரை; ''அரசு மருத்துவமனைகளில் 32 ஆயிரம் மருத்துவ பணியிடங்களை நிரப்பாமல் மக்களின் உயிர்மீது அலட்சிய போக்குடன் உள்ள தி.மு.க., அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது'' என அ.தி.மு.க., மருத்துவரணிஇணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், 38 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 256 தாலுகா மற்றும் தாலுகா சாரா மருத்துவமனைகள்,1832 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 துணை சுகாதார நிலையங்கள், 487 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
பழனிசாமி ஆட்சியில் தான் சுகாதாரத் துறையில்பல்வேறு தரங்கள் உயர்த்தப்பட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள்,உதவியாளர்கள் என 31,250 பல்வேறு மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஆனால் இன்று 6900க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செவிலியர்கள், உதவியாளர்கள் என ஏறத்தாழ32 ஆயிரம் மருத்துவ காலி பணியிடங்கள் உள்ளன. மருத்துவக் கல்லுாரி இயக்கத்தில் 2023 ஆண்டுகான இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
அதேபோல் பேராசிரியர்கள், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் என 2500 பதவி காலியாக உள்ளது
தினந்தோறும் சுகாதாரதுறையின் அவல நிலை குறித்து பழனிசாமி தோலுரித்து காட்டி வருகிறார். இனியும் மக்களை ஏமாற்றமுடியாது. பழனிசாமி ஆட்சி காலத்தில் ராக்கெட் வேகத்தில் செயல்பட்ட சுகாதாரத்துறை தற்போது ஆமைவேகத்தில் உள்ளது.இதற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

