/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு
/
நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு
ADDED : பிப் 24, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : திருமங்கலம் நகராட்சி கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.
இக்கூட்டம் நகராட்சி தலைவர் ரம்யா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஆதவன், பொறியாளர் ரத்தினவேலு முன்னிலை வகித்தனர். மொத்தம் 56 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. கூட்டம் ஆரம்பித்தபோது அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தலைவர் உமா தலைமையில் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி பொறியாளர் ரத்தினவேலிடம் மனு அளித்து வெளியில் வந்தனர்.
நேற்று கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக கூறினர்.
மீறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றம் மூலம் சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர்.