நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் விவசாயிகளுக்கு இயற்கை பூச்சி விரட்டிகளான ஆடுதொடா, நொச்சி செடிகள் இலவசமாக வழங்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ரசாயன மருந்து பயன்பாட்டை குறைத்து இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி மண்வளத்தை பெருக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் வயல்களில் வளர்க்க ஆடாதோடா, நொச்சி செடிகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 செடிகள் வழங்கப்படும். தேவைப்படுவோர் வேளாண் உதவி அலுவலர்களையோ, திருநகர் 2வது பஸ் நிறுத்தத்தில் உள்ள வேளாண் அலுவலகத்திலோ நேரில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.