/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல் வயலில் பாசியை கட்டுப்படுத்த ஆலோசனை
/
நெல் வயலில் பாசியை கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : டிச 24, 2025 06:39 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டாரத்தில் நெடுங்குளம் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நெல் வயல்களில் பாசி பரவி காணப்படுகிறது.
அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் உதவி இயக்குனர் பாண்டி கூறியதாவது: இந்தப் பாசியின் வளர்ச்சி அதிக கந்தகம், உப்பு நீர், காற்றோட்டம் இல்லாமல் ஈரப்பதம் காரணமாக ஏற்படுகிறது. இதனால் பயிர் வளர்ச்சி பாதித்து, வயல் முழுவதும் பாசி படர்ந்து பயிரின் வேர், இலைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை தடுக்கிறது. இதனை தடுக்க ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ காப்பர் சல்பேட் மணலுடன் கலந்து சாக்கு பையில் கட்டி நீர் பாயும் இடத்தில் வைக்கலாம் அல்லது ஈரமான வயலில் தெளிக்கலாம். வயலில் அதிக நீரை வடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

