/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருத்து சுதந்திரம் என்று பிறரது நம்பிக்கையை பறிக்க கூடாது கம்பன் விழாவில் அறிவுரை

ADDED : டிச 09, 2024 05:28 AM
மதுரை: 'குறிப்பிட்ட மதத்தை, இதிகாசத்தை பின்பற்றும் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கையை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை' என பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார்.
மதுரையில் கம்பன் விழா நேற்றுடன் நிறைவடைந்தது. காலையில் நடந்த நிகழ்வில் 'ராமாயணத்தில் அவதார நோக்கம் நிறைவேற பெரிதும் உதவிய பாத்திரம்' என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர் தலைமையில் விவாதம் நடந்தது.
அவர் பேசியதாவது: கூனி - கைகேயி கதாபாத்திரங்கள் மூலம் நாம் அறிவது நமக்கு கீழே வேலை செய்பவர்கள் தவறு செய்தாலும் மேலே இருப்பவர்களே பொறுப்பாகின்றனர். தீய எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தீய எண்ணம் மனதிற்குள் வந்தால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
சீதையின் மேல் ராவணனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதால் அவள் எப்படி கற்புக்கரசி என சிலர் கேட்கின்றனர். ஒரு மதத்தை, இதிகாசத்தை மதிக்கும் கோடி பேர் இருக்கின்றனர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவர்களின் நம்பிக்கையை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. அனைத்து மதத்தையும் மதிக்க வேண்டும். ராவணன், தான் பார்த்த சீதையை காதலிக்கவில்லை. சூர்ப்பனகையின் கற்பனையில் கேட்ட சீதையைதான் காதலித்தான்.
சூர்ப்பனகையே அவதார நோக்கத்தை நிறைவேற்ற உதவிய பாத்திரம் என்றார். மாலையில் பேச்சாளர் ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.