/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிற்சி நிறைவு விழாவில் காவலர்களுக்கு அறிவுரை
/
பயிற்சி நிறைவு விழாவில் காவலர்களுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 09, 2025 06:54 AM
மதுரை : மதுரையில் உள்ள இடையப்பட்டி காவலர் பயிற்சி பள்ளியில் 366 பேர் பயிற்சி பெற்று வந்தனர். இவர்களின் பயிற்சி நேற்றுடன் முடிந்தது. இவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி தமிழ்நாடு போலீஸ் அகாடமி பயிற்சி இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் பேசினார்.
அவர் பேசியதாவது:காவலர் பயிற்சி பள்ளியில் 7 மாதங்கள் மழை, வெயில் தாண்டி பயிற்சி பெற்றுள்ளீர்கள்.
வரும் 25 ஆண்டுகளில் காவல்துறையில் பணியாற்றுவதற்கான மன, உடல் அளவில் பணியாற்றுவதற்கான பயிற்சியை அளித்துள்ளோம். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றுவதற்கு வாழ்த்துக்கள் என்றார். பயிற்சி பள்ளி முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர் மாரியப்பன் முன்னிலையில் காவலர்கள் பங்கேற்றனர்.