/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் அறிவுரைக் கழகம் துவக்கம் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க
/
மதுரையில் அறிவுரைக் கழகம் துவக்கம் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க
மதுரையில் அறிவுரைக் கழகம் துவக்கம் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க
மதுரையில் அறிவுரைக் கழகம் துவக்கம் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க
ADDED : ஆக 12, 2025 05:42 AM

மதுரை : மதுரையில் குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 20 மாவட்டங்களை உள்ளடக்கிய அறிவுரைக் கழகத்தை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாட்ஷா திறந்து வைத்தார்.
குண்டர் சட்டத்தில் கைதாவோரை அறிவுரைக் கழகம் விசாரித்து, அரசுக்கு தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. சென்னையில் மட்டுமே இது செயல்படுவதால், தென்மாவட்ட கைதிகளை விசாரணைக்கு அழைத்து செல்வதில் நேர விரயமாகிறது.
இதனை தவிர்க்க மதுரையில் அறிவுரைக் கழகம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று ஆனையூரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், அறிவுரைக் கழகம் துவங்கப்பட்டது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, கரூர், அரியலுார், பெரம்பலுார், கோவை, திருப்பூர், நாகை, திருவாரூர் ஆகிய 20 மாவட்டங்கள் இதன் எல்லைக்குள் உள்ளன.
நீதிபதி கே.என்.பாட்ஷா கூறியதாவது:
மதுரையில் துவங்கியதன் மூலம் குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விரைந்து விசாரிக்க முடியும். இச்சட்டத்தில் ஒருவரை சிறையில் அடைக்க முகாந்திரம் இருக்க வேண்டும். கலெக்டர், போலீஸ் கமிஷனர் இச்சட்டத்திற்கான உத்தரவை பிறப்பிப்பர்.
இது சம்பந்தமான ஆவணங்களை சிறைவாசிக்கு 5 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
இச்சட்டத்தில் சிறையில் அடைத்தால் ஓர் ஆண்டுக்கு ஜாமின் கிடையாது. எனவே இச்சட்டம் சுமத்தப்பட்ட காரணங்கள் சரியா என விசாரித்து அரசுக்கு கருத்து தெரிவிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் 13 நாட்கள் விசாரணை நடக்கும்.
இவ்வாறு கூறினார்.
ஓய்வு நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஆனந்தி, உயர்நீதிமன்ற உதவி கமிஷனர் குருசாமி, போலீஸ் துணை கமிஷனர் அனிதா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பங்கேற்றனர்.