/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
த.வெ.க., மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி; பொதுச் செயலாளர் ஆனந்த் பேட்டி
/
த.வெ.க., மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி; பொதுச் செயலாளர் ஆனந்த் பேட்டி
த.வெ.க., மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி; பொதுச் செயலாளர் ஆனந்த் பேட்டி
த.வெ.க., மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி; பொதுச் செயலாளர் ஆனந்த் பேட்டி
ADDED : ஆக 12, 2025 05:42 AM
திருமங்கலம் மதுரையில்ஆக.21ல் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநாட்டிற்கு போலீசார் நேற்று அனுமதி அளித்தனர்.
த.வெ.க., வின் 2 வது மாநில மாநாடு ஆக. 21ல் மதுரை அருப்புக்கோட்டை ரோடு பாரப்பத்தியில் நடக்க உள்ளது. இதற்காக கட்சி சார்பில் அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாநாடு தொடர்பாக வாகன நிறுத்துமிடம், உணவு, கலந்து கொள்வோர் குறித்து 42 கேள்விகளை போலீசார் கேட்டிருந்தனர். கேள்விகளுக்கு கட்சியினர் ஏற்கனவே பதில் அளித்து இருந்த நிலையில் மனு பரிசீலனையில் இருந்தது.
மாநாட்டிற்கு பத்து நாட்களே இருக்கும் நிலையில் போலீஸ் அனுமதி கிடைக்காமல் இருந்ததால், நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் திருமங்கலம் ஏ.எஸ்.பி., அலுவலகம் வந்தார். ஏ.எஸ்.பி., அன்சுல் நாகரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின்னர் போலீசார் அனுமதி அளித்தனர்.
ஆனந்த் கூறியதாவது : மாநாடு குறித்து போலீசார் குறிப்பிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளோம். மாநாட்டுக்கான பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டை விட சிறப்பாக நடப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம் என்றார்.
போலீஸ் தரப்பில் கூறும் போது, 'மாநாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்' என்றனர்.