/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிமன்றத்தில் வசதிகள் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
/
நீதிமன்றத்தில் வசதிகள் வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 15, 2024 05:57 AM
மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் இளங்கோ தலைமை வகித்தார்.
நீதிமன்ற வளாகத்தில் வாகன நிறுத்தம், கழிப்பறை, கேன்டீன், அவசர உதவிக்கு மருத்துவமனை, வழக்கறிஞர்கள் அறைகளில் திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா, மின்துாக்கி (லிப்ட்) உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயலாளர் நந்தகோபன், மூத்த தலைவர் சுப்பிரமணியன், செயல் தலைவர் ஆதித்தன், பொருளாளர் தனலட்சுமி, இணைச் செயலாளர் வேலுச்சாமி பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.முரளிசங்கரிடம் மனு அளிக்கப்பட்டது.

