/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் நாளை வரை விவசாய கண்காட்சி
/
மதுரையில் நாளை வரை விவசாய கண்காட்சி
ADDED : ஆக 23, 2025 04:13 AM
மதுரை : மதுரை ஐடா ஸ்கட்டரில் கோவை யுனைடெட் ட்ரேட் பேர் இந்தியா பி.லிட்., சார்பில் ஆக.,24 வரை விவசாய கண்காட்சி நடக்கிறது.
நேற்று கண்காட்சியை வேளாண் இணை இயக்குநர் முருகேசன் திறந்து வைத்தார். வேளாண் விற்பனை பிரிவு துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி, மத்திய திட்ட துணை இயக்குநர் ராணி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கண்காட்சியில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாயம் சார்ந்த தொழில் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் ஸ்டால்களை அமைத்துள்ளன. தானியங்களை தரம் பிரிக்கும் இயந்திரம், சோலார் மின்வேலி, பென்சின் தயாரிக்கும் இயந்திரங்கள், விவசாய கருவிகள், மோட்டார், உரம், பூச்சி மருந்துகள், வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பொருட்கள் இங்கே சலுகை விலையில் கிடைக்கின்றன.
ஏற்பாடுகளை நிர்வாக இயக்குநர் பாக்கியராஜ் செய்திருந்தார். கண்காட்சி தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.