/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துாய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
/
துாய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஆக 23, 2025 04:12 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள், 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அமைச்சர் மூர்த்தி தலைமையில் கலெக்டர் பிரவீன்குமார், கமிஷனர் சித்ரா முன்னிலையில் 11ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
கொரோனா கால ஊக்க தொகை ரூ.15 ஆயிரம், துாய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பண்டிகை கால போனஸ் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் உத்தரவாதம் அளித்தார். இரு நாட்களுக்குள் தனியார் அவுட்சோர்சிங் நிறுவனம், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
சுகாதார, பொறியியல் உள்ளிட்ட இதர பிரிவு பணியாளர்களுக்கான கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக மாநகராட்சி தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. அவற்றை எழுத்துப் பூர்வமாக பெறப்பட்ட பின் பணிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.