/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆன்லைன் வர்த்தகத்தில் விவசாய பொருட்கள்
/
ஆன்லைன் வர்த்தகத்தில் விவசாய பொருட்கள்
ADDED : நவ 13, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மின்னணு வர்த்தக நிறுவனங்களுடன் இணைக்கும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.
துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி பேசுகையில், ''வேளாண் வணிகத்துறையின் கீழ் 13 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்கிறோம். தற்போது 7 நிறுவனங்களை பிளிப்கார்டு மின்னணு வர்த்தக தளத்தில் பதிவு செய்துள்ளோம். இதன் மூலம் விவசாயிகளின் பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்கப்படும்'' என்றார்.
வேளாண் அலுவலர் சித்தார்த் ஏற்பாடுகளை செய்திருந்தார்.