/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராமசபை கூட்டத்தில் வேளாண் திட்ட விளக்கம்
/
கிராமசபை கூட்டத்தில் வேளாண் திட்ட விளக்கம்
ADDED : அக் 31, 2025 01:53 AM
மதுரை:  நாளை (நவ.1)  உள்ளாட்சி தினத்தையொட்டி அனைத்து வட்டாரங்களிலும் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் விவசாயிகளுக்கான அடையாள எண்ணை பதிவு செய்யலாம் என வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்தார்.
வேளாண் துறையின் தொழில்நுட்ப, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள்,  பயிர் அறுவடை பரிசோதகரர்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வர். அக்கூட்டத்தில் காலை முதல் மாலை வரை  விவசாயிகளுக்கான அடையாள எண் வழங்கும் பணிக்கான பதிவு நடைபெறும். இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள், நிலத்தின் கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் எண், அலைபேசி எண்ணுடன் வந்தால் உடனடியாக பதிவு செய்து விவசாய அடையாள எண் பெறலாம். மேலும் பசுந்தாள் உர சாகுபடி, தமிழ் மண்வளம் போர்ட்டல், உழவர் செயலி இயற்கை விவசாயம், உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம், பி.எம். கிசான் திட்டத்தில் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பது பற்றிய விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

