ADDED : ஏப் 20, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி பகுதியில் தங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
டி.ஆண்டிபட்டியில் மாணவி கோமளவள்ளி நெல் வயலை தாக்கும் புகையான் பூச்சியை கட்டுப்படுத்த பகலில் மஞ்சள் நிற தட்டுப்பொறி வைத்தும், இரவில் ஒளிப்பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு செயல் முறையில் விளக்கினார். மாணவி கீர்த்தீஸ்வரி கத்தரி செடிகளுக்கு சாம்பல் இடுதலின் நன்மைகள், கிடைக்கும் ஊட்டச்சத்து, பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். போடிநாயக்கன்பட்டி விவசாயிகளுக்கு மண்ணின் நுண்ணுயிர்களை அதிகப்படுத்தும் பாஸ்போ பாக்டீரியா குறித்தும் மாணவிகள் விளக்கினர்.