நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் கச்சைகட்டியில் கிராம வேளாண் முன்னேற்ற குழு ராபி விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
உதவி இயக்குனர் பாண்டி தலைமை வகித்து அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டம், வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வேளாண் விரிவாக்கம் மையங்களில் தேவையான இடு பொருட்களை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பெறும் வசதிகள் குறித்து விளக்கினார். உதவி பொறியாளர் காசிநாதன், வேளாண் அலுவலர் சத்தியவாணி முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் (ஓய்வு) மகாராஜன் ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் சிறுதானியங்கள், பயறு வகை தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். உதவி வேளாண் அலுவலர் பாண்டியராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி மேலாளர்கள் பூமிநாதன், அருணாதேவி பங்கேற்றனர்.