/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேளாண் மதிப்பு கூட்டும் மையம் ஆரம்பிக்கலாம் மதுரைக்கு ரூ.2 கோடி வரை மானிய இலக்கு
/
வேளாண் மதிப்பு கூட்டும் மையம் ஆரம்பிக்கலாம் மதுரைக்கு ரூ.2 கோடி வரை மானிய இலக்கு
வேளாண் மதிப்பு கூட்டும் மையம் ஆரம்பிக்கலாம் மதுரைக்கு ரூ.2 கோடி வரை மானிய இலக்கு
வேளாண் மதிப்பு கூட்டும் மையம் ஆரம்பிக்கலாம் மதுரைக்கு ரூ.2 கோடி வரை மானிய இலக்கு
ADDED : அக் 19, 2025 03:24 AM
மதுரை: தமிழகத்தில் 100 வேளாண் மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் தொழில் துவங்குபவர்களுக்காக ரூ.2 கோடி வரை மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண், தோட்டக்கலை விளைபொருட்களின் மதிப்புக் கூட்டுதல், பதப்படுத்தும் தொழில் துவங்க விரும்பும் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வேளாண் வணிகத்துறையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வேளாண், தோட்டக்கலை விளைபொருட்களில் மதிப்புக் கூட்டும் விதமாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பதப்படுத்தும் மையங்களை நிறுவனங்கள் அல்லது தொழில்முனைவோர் புதிதாக தொடங்கலாம்.
பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர், பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்குவோருக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. பதப்படுத்தும் மையங்கள் அமைப்பதற்கான இயந்திரங்களுடன், கட்டடத்திற்கும் கடன் உதவி பெறும் வசதி உண்டு. தொழில் திட்ட மொத்த மதிப்பீடு ரூ.10 கோடிக்கு மிகாமல் இருந்தால் அனைத்து பிரிவினருக்கும் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது. சுயமுதலீடு 5 சதவீதம். தொழில் துவங்கிய பின் ஐந்தாண்டுகளுக்கு 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் மத்திய அரசின் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்தால் கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம் பெறலாம்.
திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான மாவட்ட தொழில்நுட்பக் குழுவினரால் தேர்வு செய்யப்படும். மதுரை மாவட்டத்திற்கு ரூ.2 கோடி வரை மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்க விரும்புபவர்கள் மதுரை அண்ணாநகரில் உள்ள வேளாண் வணிக துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். கூடுதல் தகவல்களுக்கு 94424 91947ல் தொடர்பு கொள்ளலாம்.