/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மணல் மூடைகளால் தண்ணீரை தடுத்ததால் விவசாயம் பாதிப்பு
/
மணல் மூடைகளால் தண்ணீரை தடுத்ததால் விவசாயம் பாதிப்பு
மணல் மூடைகளால் தண்ணீரை தடுத்ததால் விவசாயம் பாதிப்பு
மணல் மூடைகளால் தண்ணீரை தடுத்ததால் விவசாயம் பாதிப்பு
ADDED : நவ 13, 2024 05:39 AM

மேலுார் : தெற்குத்தெருவில் கண்மாய் நிறைந்து தண்ணீர் வெளியேறும் மறுகால் பகுதியில் தனிநபர்கள் மணல் மூடைகளை அடுக்கி தண்ணீரை வெளியேற விடாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தெற்குத்தெருவில் 20 ஏக்கர் பரப்பளவில் நீர்வளத்துறைக்கு சொந்தமான கூட்டமலி கண்மாய்க்கு 13 வது மடை 10வது கால்வாய் வழியாக தண்ணீர் நிரம்பும்.அதனால் ஏராளமான ஏக்கர் பயன் பெறும். இக் கண்மாய் நிறைந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் (மறுகால்) சிலர் மணல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர். அதனால் பிற விவசாயிகளின் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதோடு கண்மாய்க்கு அருகிலுள்ள மலைச்சாமி, நடராஜன், சசிகுமார் உள்ளிட்ட பல விவசாயிகளின் வயலில் தண்ணீர் தேங்கி விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
விவசாயி செந்தில்குமார்: தண்ணீர் 18 நாட்களாக தேங்கியதால் நெல் நாற்றுகள் அழுகின. இதுகுறித்து நீர்வளத்துறையினரிடம் புகார் தெரிவிக்க மணல் மூடைகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றினர். ஏற்கனவே நெல் நாற்றுகள் அழுகியதால் புதிதாக நெல் நாற்றுகள் நடவு செய்யும் நேரத்தில் தனிநபர்கள் மீண்டும் மணல் மூடைகளை அடுக்கினர். அதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது என்றார்.

