/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
100 கோயில்களில் வழிபட அ.தி.மு.க., ஏற்பாடு
/
100 கோயில்களில் வழிபட அ.தி.மு.க., ஏற்பாடு
ADDED : மே 16, 2025 03:24 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் பழனி சாமி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஜெ.,பேரவை இணை செயலாளர் ராஜேஷ்கண்ணா தொகுத்து வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், கணேசன் முன்னிலை வகித்தனர்.
நகர துணைச் செயலாளர் சந்தனத்துரை வரவேற்றார்.
2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைய 100 கிராம கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட உள்ளது என பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பின் வேட்டி, சேலை, துண்டு,, வாடிப்பட்டி அரசு ஆண்கள், பெண்கள், பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ.10, 7, 5, ஆயிரம் பரிசு வழங்கினார்.
ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, ஜெ.பேரவை நகர செயலாளர் தனசேகரன், பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன், பார்த்திபன் பங்கேற்றனர்.
வேல்முருகன் நன்றி கூறினார்.