/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தனுஷ்கோடி ரயில்வே திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாதா தி.மு.க., அரசுக்கு அ.தி.மு.க., கேள்வி
/
தனுஷ்கோடி ரயில்வே திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாதா தி.மு.க., அரசுக்கு அ.தி.மு.க., கேள்வி
தனுஷ்கோடி ரயில்வே திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாதா தி.மு.க., அரசுக்கு அ.தி.மு.க., கேள்வி
தனுஷ்கோடி ரயில்வே திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாதா தி.மு.க., அரசுக்கு அ.தி.மு.க., கேள்வி
ADDED : ஜன 17, 2025 05:27 AM
மதுரை: 'கடலில் பேனா வைக்க சுற்றுச்சூழல் அனுமதி கேட்ட தி.மு.க., அரசு, தற்போது தனுஷ்கோடி திட்டத்திற்கு அனுமதி பெற முடியாதா'' என, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: தென் மாவட்ட பொருளாதார மேம்பாடுக்கு முக்கிய திட்டமான அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் கைவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இது தமிழக மக்களிடம் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்டித்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ஜன.19ல் தி.மு.க., அரசை கண்டித்தும், நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வந்த நிலையில் தற்போது ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.,ல் ஜன.10 ம் தேதி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார். தமிழக ரயில்வே குறித்து செய்தியாளர்கள் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டனர். ரயில்வே பணிமனை இரைச்சல் காரணமாக அந்த கேள்வியை தனுஷ்கோடி ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் தொடர்பானது என்று எண்ணிய அமைச்சர் அதற்கான பதிலை கூறினார்.
அதில் நிலம் ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் பிரச்னையில் கைவிடலாம் என மாநில அரசு எழுத்துப்பூர்வமாக கேட்டுக் கொண்டதாக கூறியிருந்தார். அமைச்சர் அளித்த பதிலை கேள்வி கேட்ட செய்தியாளர்கள் மதுரை தூத்துக்குடி திட்டத்தை கைவிட்டதாக எண்ணிக் கொண்டனர்.
தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக உள்ள பழனிசாமி ஆர்ப்பாட்டம் என்ற அறிவிப்பு வெளியான உடனே மத்திய, மாநில அரசுகள் வாய் திறந்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி. அதன் அடிப்படையில் ஜன.19ஆம் தேதி போராட்டம் கைவிடப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு பழனிசாமி முதல்வராக இருந்தபோது, பிரதமர் மோடி, தனுஷ்கோடி ரயில்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக தற்போது மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.கடலில் பேனா வைக்கும் போது சுற்றுச்சூழல் அனுமதியை எப்படி பெற்றார்களோ அதுபோல இதற்கும் அனுமதி பெற வேண்டாமா. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.