/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., பாஜ., கூட்டணி வேண்டும்; மதுரையில் தினகரன் பேட்டி
/
தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., பாஜ., கூட்டணி வேண்டும்; மதுரையில் தினகரன் பேட்டி
தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., பாஜ., கூட்டணி வேண்டும்; மதுரையில் தினகரன் பேட்டி
தி.மு.க.,வை வீழ்த்த அ.தி.மு.க., பாஜ., கூட்டணி வேண்டும்; மதுரையில் தினகரன் பேட்டி
ADDED : டிச 18, 2024 05:54 AM
மதுரை : தமிழகத்தில் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி உருவாக வேண்டும் என அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
மதுரையில் அக்கட்சி சார்பில் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தினகரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது:
தமிழக அரசை மாற்றான் தாய் மனதுடன் மத்திய அரசு நடத்தவில்லை. புயல், வெள்ள பாதிப்பு குறித்து மத்தியக்குழு ஆய்வுக்கு வரும் முன் தமிழகத்திற்கு நிதி வந்து சேர்ந்தது. அ.தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என பா.ஜ., நினைக்கவில்லை. அ.தி.மு.க., பலம் அதிகரிக்க வேண்டும் என்றே நினைக்கிறது. இதனால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வாக செயல்பட வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் எண்ணம்.
பழனிசாமிக்கு அ.தி.மு.க.,வுக்குள் எதிர்ப்பு வலுத்துள்ளது. அவரது செயல்பாட்டால் 2026 க்கு பிறகு அ.தி.மு.க., என்ற கட்சி இருக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. அவரது செயல்பாடுகள் பிற கட்சிகளுக்கு தான் பலன் தரும். 4 ஆண்டு ஆட்சியில் நடந்த ஊழல் பயம், அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள், கோடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் இருந்து தப்பிக்கவே தி.மு.க.வு.,க்கு மறைமுகமாக அவர் ஆதரவு அளிக்க நினைக்கிறார். தி.மு.க.,வுடனான அவரின் கள்ளக் கூட்டணியை மக்கள் புரிந்துகொள்வர்.
பழனிசாமிக்கு தேர்தல் கமிஷனில் கிடைத்த வெற்றி தற்காலிகமானது தான். அ.தி.மு.க.,வில் எங்கள் 'ஸ்லீப்பர் செல்கள்' வேகமாக செயல்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர். 2026ல் தி.மு.க.,வை வீழ்த்த பா.ஜ., வுடன் இணைந்து அ.தி.மு.க., தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.