தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விலைவாசியை ஒப்பிட்டு அ.தி.மு.க., பிரசாரம்

 விலைவாசியை ஒப்பிட்டு அ.தி.மு.க., பிரசாரம்

 விலைவாசியை ஒப்பிட்டு அ.தி.மு.க., பிரசாரம்


ADDED : பிப் 13, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசார கூட்டம் நகர செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடந்தது.

இதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேசியதாவது:

தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பால், அரிசி, பருப்பு, மின்கட்டணம், சொத்து வரி வீட்டு வரியை உயர்த்தி விட்டனர். பள்ளி, கல்லுாரி அருகே போதைப் பொருட்கள், பாலியல் வன்கொடுமை தலை விரித்து ஆடுகிறது என்றார்.

பின்பு பெண்களிடம், அ.தி.மு.க., ஆட்சியில் பால், அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையையும், தி.மு.க., ஆட்சியில் விலையையும் கேட்டு கையடக்க மின்னணு இயந்திரத்தில் ஒப்பீடு செய்தனர். ஏற் பட்டுள்ள இழப்பீடு குறித்து ரசீது வழங்கி விளக்கினர். பொதுமக் களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

வாடிப்பட்டி நகர் செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஜெ., பேரவை மாநில துணைச் செய லாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றியச் செயலாளர்கள் காளிதாஸ், ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

ஐ.டி., பிரிவு மாவட்ட செயலாளர் சிங்கராஜ பாண்டியன், விவசாய அணி செயலாளர் குமார், இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன் மணியன், வழக்கறிஞர் அணி காசி நாதன், அழகர்சாமி, ஐ.டி., பிரிவு வேல்முருகன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us