/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க., பிரசார வாகனம் துவக்கம்
/
அ.தி.மு.க., பிரசார வாகனம் துவக்கம்
ADDED : செப் 01, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பரவையில் மதுரை மேற்கு சட்டசபை தொகுதி சார்பில் அ.தி.முக., பொதுச்செயலாளர் பழனிசாமியின் எழுச்சி பயண பிரசார வாகன துவக்க விழா நடந்தது.
இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தொகுதி முழுவதும் பாடல், படக்காட்சிகளுடன் வாகனம் வலம் வரும்.
இந்த வாகனங்களை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
பொதுமக்களுக்கு அழைப்பிதழ், துண்டு பிரசுரங்கள் வழங்க பட்டன.
முன்னாள் அமைச்சர் வளர்மதி, நகர செயலாளர் ராஜா, மாவட்ட துணை செயலாளர் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், அவை தலைவர் அண்ணாதுரை, நகர அவை தலைவர் நாகமலை, பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன், நிர்வாகிகள் மனோஜ், ராஜூ பங்கேற்றனர்.