நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அடுத்த மாதம் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு நேற்று திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி சார்பில் ஆட்டோ பிரசாரம் துவக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை விகித்தார்.
மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., துவக்கி வைத்து ஆட்டோ டிரைவர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார். நிர்வாகிகள் செல்வகுமார், மோகன்தாஸ், பாலா கலந்து கொண்டனர்.