sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலை கண்டித்து அ.தி.மு.க., வெளிநடப்பு! முதல்வர் துவக்கியும் குடிநீர் வரலை எனக் குற்றச்சாட்டு

/

மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலை கண்டித்து அ.தி.மு.க., வெளிநடப்பு! முதல்வர் துவக்கியும் குடிநீர் வரலை எனக் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலை கண்டித்து அ.தி.மு.க., வெளிநடப்பு! முதல்வர் துவக்கியும் குடிநீர் வரலை எனக் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலை கண்டித்து அ.தி.மு.க., வெளிநடப்பு! முதல்வர் துவக்கியும் குடிநீர் வரலை எனக் குற்றச்சாட்டு

1


UPDATED : பிப் 11, 2026 10:11 AM

ADDED : பிப் 11, 2026 06:35 AM

Google News

UPDATED : பிப் 11, 2026 10:11 AM ADDED : பிப் 11, 2026 06:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்கு பின் நடந்த கவுன்சில் கூட்டத்தில் 2026 -2027 க்கான பட்ஜெட் தாக்கல் செய்து விவாதம் நடத்த அனுமதிக்காததை கண்டித்து அ.தி.மு.க., வெளிநடப்பு செய்தது.

சொத்துவரி முறைகேடு வழக்கு எதிரொலியாக மேயராக இருந்த இந்திராணி கடந்த அக்டோபரில் ராஜினாமா செய்தார். அதன் பின் 3 மாதங்களாக கூட்டம் நடக்கவில்லை. உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவால் நேற்று துணைமேயர் நாகராஜன் தலைமையில் கூட்டம் நடந்தது. கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தார்.

மன்றச் செயலாளர் சித்ரா தீர்மானத்தை வாசிக்க ஆரம்பித்த போது, அ.தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தை தனியாக ஏன்நடத்தவில்லை. ஒரே நேரத்தில் பட்ஜெட் தாக்கல், விவாதமில்லாத கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பல வார்டுகளில் இன்னும் குடிநீர் வரவில்லை. இவற்றை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி அக்கட்சி கவுன்சிலர்கள் வெளியேறினர்.

இதன்பின் தீர்மானங்களின் எண்களை மட்டும் வாசித்து, இரண்டு நிமிடங்களில் 131 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து 2026 -27க்கான மாநகராட்சி பட்ஜெட்டை துணைமேயர் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, மூர்த்தி, தியாகராஜனுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் வரவு, செலவு விவரங்களை கூட்டத்தில் தெரிவிக்கவில்லை. கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கூட்ட அறையில் பட்ஜெட் புத்தகத்தை வைத்திருந்த தி.மு.க., காங்., கம்யூ., கவுன்சிலர்களும் அதில் என்ன உள்ளது. வரவு, செலவு எவ்வளவு, புதிய திட்டங்கள் என்னென்ன என்பதை கூட பார்க்காமல் சில நொடிகளில் வெளியேறி விட்டனர்.

வி.சி., கவுன்சிலரால் சிரிப்பலை நீதிமன்றம் உத்தரவால் நடத்தப்பட்ட இக்கூட்டம் வழக்கம்போல் அல்லாமல் சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்ற தகவல் ஆளுங்கட்சி, கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கு முதல் நாளே தகவல் கசிந்துவிட்டது. ஆனால் 71வது வார்டு விடுதலை சிறுத்தை கவுன்சிலர் முனியாண்டிக்கு இத்தகவல் தெரியவில்லை. இதனால் கூட்டம் முடிந்ததாக துணைமேயர் அறிவித்தபோது 'துணைமேயரே, விவாதம் நடக்கலையே...' என பரிதாபமாக அவர் கேட்டபோது 'விஷயம்' தெரிந்த கவுன்சிலர்கள் சிரித்தனர்.

பேனருடன் வந்த பா.ஜ.,. கவுன்சிலர் 86வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் பூமாஸ்ரீ, மறைத்து கொண்டுவந்த பேனருடன் தரையில் அமர்ந்து, '100 வார்டுகளிலும் இறைச்சி குப்பை சேர்கிறது. அதை நாய்கள் அதிகம் சாப்பிடுகின்றன. அவை கால்நடைகள், மனிதர்களை கடிக்கின்றன. இதுகுறித்து புகார் செய்தும் நடவடிக்கை இல்லை' என கோஷமிட்டார். இதுதொடர்பாக பேனரையும் காட்டி தர்ணா செய்தார். அவரை அவைக் காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

* ரூ.8.87 கோடி பற்றாக்குறை பட்ஜெட் // மாநகராட்சியின் 2026 - 2027க்கான வரவு செலவு அறிக்கையில், வரவினங்களாக, ரூ.867.74 கோடி சொந்த வருவாயாகவும், ரூ.499.15 கோடி அரசில் பல்வேறு திட்டங்களால் கிடைக்கும் மானியமாகவும், ரூ.83.55 கோடி திட்டங்களுக்கான கடனாகவும் என மொத்தம் ரூ.1450.44 கோடி என குறிப்பிடப்பட்டது. செலவினங்களாக, ரூ.348.87 கோடி பணியாளர், ரூ.37.15 கோடி நிர்வாக, ரூ.325.68 கோடி இயக்கம், பராமரிப்பு செலவினங்களாகவும், ரூ.28.61 கோடி வங்கி வட்டி, ரூ.5.54 கோடி திட்டச் செலவினம், ரூ.40.18 கோடி பொது நிதியில் உள்ளாட்சி நிதி பங்குத் தொகையாகவும், ரூ.49.33 கோடி குடிநீர் வடிகால் நிதி உள்ளாட்சி நிதிப் பங்குத் தொகையாகவும், ரூ.553.27 கோடி மூலதன செலவினம், ரூ.70.67 கோடி கடன் திரும்ப செலுத்துதல் செலவினம் என ரூ.1459.31 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.8.87 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலின்போது கமிஷனர் சித்ரா, கணக்கு குழுத் தலைவர் நுார்ஜஹான் உடன் இருந்தனர்.



மத்திய சிறை செம்மொழி பூங்காவாகிறது /// பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் // * மாநகராட்சியில் ரூ.42.65 கோடியில், வைகை 1, 2வது திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், 118 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட குடிநீரேற்று நிலையம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். * மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாளச் சாக்கடை குழாய்கள் ரூ.450 கோடியில் சீரமைக்கப்படும். * மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்க, புதிய வடிகால்கள் அமைக்க 2026 - 2027 ல் ஐந்து கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்படும். * 'ஹாஸ்பிட்டல் ஆன் வீல்ஸ்' என்ற புதிய திட்டம் துவங்கப்படும். இதன்மூலம் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து புறநகர் பகுதியில் வசிக்கும் பின்தங்கிய மக்களுக்கும் நேரடியாக சிறப்பு சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். * இந்தாண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். * மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளும் ஒரே வண்ணத்தில் மாற்றப்படும். * மத்திய சிறையை இடமாற்றம் செய்து அங்கு செம்மொழி பூங்கா அமைக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.



முன்னாள் மேயர் உட்பட6 பேர் 'ஆப்சென்ட்'


கூட்டத்தில் 95 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மேயர் பதவியை இழந்த இந்திராணி, மண்டலம் 3ன் தலைவர் முகேஷ் சர்மா, நகரமைப்பு குழுத் தலைவர் மூவேந்திரன் உட்பட 6 தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாற்றுத்திறனாளி பிரதிநிதி கவுன்சிலர் சுந்தரேஸ்வரன் முதன்முறையாக பங்கேற்றார். இதன்மூலம் கவுன்சிலர்களின் மொத்த எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.








      Dinamalar
      Follow us