/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி 100 வார்டுகளில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை அ.தி.மு.க., வலியுறுத்தல்
/
மாநகராட்சி 100 வார்டுகளில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை அ.தி.மு.க., வலியுறுத்தல்
மாநகராட்சி 100 வார்டுகளில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை அ.தி.மு.க., வலியுறுத்தல்
மாநகராட்சி 100 வார்டுகளில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : டிச 15, 2025 05:39 AM
திருப்பரங்குன்றம்: ''மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மாநகராட்சிக்கு எந்த சிறப்பு நிதியும் பெறவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் செய்த பணிகளை முழு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்'' என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசினார்.
மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு சேவை செய்வதில் முதலிடத்தில் இருந்த மதுரை மாநகராட்சி தற்போது ஊழல் செய்வதில் முதல் இடமாக மாறிவிட்டது. நான் மேயராக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தேன். 72 வார்டுகளை மக்கள் வசதிக்காக 100 வார்டுகளாக மாற்றப்பட்டது. விரிவாக்கப்பட்ட வடகரை பகுதிகளில் ரூ. 400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. குப்பை மூலம் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை வெள்ளக்கல்லில் ஏற்படுத்தப்பட்டது.
ஜெயலலிதா அரசு முதன்முதலில் மதுரை மாநகராட்சிக்கு ரூ. 250 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியது. அதன் மூலம் மதுரையில் பந்தல்குடி கால்வாய் தவிர 13 கால்வாய்கள் துார்வாரப்பட்டன. மணலுாரில் இருந்து தெப்பக்குளம் வரை குழாய் மூலம் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் மதுரை மாநகராட்சி நிலை பரிதாபமாக உள்ளது. மாநகராட்சி பராமரிப்பில் 1543 கி.மீ., சாலைகள் உள்ளன. இதில் ஆயிரம் கி.மீ., சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.
மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மாநகராட்சிக்கு எந்த சிறப்பு நிதியும் பெறவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் செய்த பணிகளை முழு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றார்.

