/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 21, 2025 03:03 AM
திருப்பரங்குன்றம்: மதுரை அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் கிழக்கு தொகுதி சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசியதாவது: தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணத்தை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி துவங்கியுள்ளார். செல்லும் இடங்களில் மக்களின் ஆதரவு அலை வீசுகிறது. 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என செய்திகள் வர துவங்கியுள்ளன.
அ.தி.மு.க.,வின் சாதனைகள், தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றார். நிர்வாகிகள் ஓம்சந்திரன், பாலா, சேதுராமன், நாகரத்தினம், ஜெய கல்யாணி, தவிடன் கலந்து கொண்டனர்.