/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க., நிர்வாகி ஆஜராக விலக்கு
/
அ.தி.மு.க., நிர்வாகி ஆஜராக விலக்கு
ADDED : ஜூலை 26, 2025 04:40 AM
மதுரை: அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்யன். இவர் 2019 ல் மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். 2019 மார்ச் 25ல் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கூட்டணி கட்சியினருடன் மதுரை கே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.,சிலைக்கு மாலை அணிவித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
மதுரை (ஜெ.எம்.,6) நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். ராஜ்சத்யன்,' கீழமை நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும். அந்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கன்னித்தேவன் ஆஜரானார். நீதிபதி பி.புகழேந்தி,'கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது. அங்கு மனுதாரர் ஆஜராக விலக்களிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டார்.