ADDED : அக் 18, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: அ.தி.மு.க., 54 வது ஆண்டு துவக்க விழா திருப்பரங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது. மதுரை கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேதுராமன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் செல்வகுமார், நாகரத்தினம், பாலா பங்கேற்றனர். அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.