/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழனிசாமி சுற்றுப்பயணம் போலீசில் அ.தி.மு.க., மனு
/
பழனிசாமி சுற்றுப்பயணம் போலீசில் அ.தி.மு.க., மனு
ADDED : ஆக 23, 2025 04:04 AM

மதுரை : மதுரையில் நான்காம் கட்ட சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி செப்.,1ல் துவங்குகிறார். செப்.,4 வரை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் பேசுகிறார். இதையொட்டி மதுரை நகர், புறநகர் மேற்கு, கிழக்கு மாவட்டம் சார்பில் பயணத்திற்கு உரிய அனுமதியும், தேவையான விளம்பரங்கள் செய்திடவும், ஒலி ஒளி அமைக்கவும், தகுந்த பாதுகாப்பு வழங்கவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் செல்லுார் ராஜூ, ராஜன்செல்லப்பா, உதயகுமார் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் சரவணன், தமிழரசன், அண்ணாதுரை, கருப்பையா, மாணிக்கம், இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிர்வாகிகள் ராஜா, குமார், முருகன், சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.