/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க.,வில் 82 மாவட்டங்களை பிரித்து 117 மாவட்டங்களாக்க திட்டம் தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளராக நியமிக்க பழனிசாமி முடிவு
/
அ.தி.மு.க.,வில் 82 மாவட்டங்களை பிரித்து 117 மாவட்டங்களாக்க திட்டம் தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளராக நியமிக்க பழனிசாமி முடிவு
அ.தி.மு.க.,வில் 82 மாவட்டங்களை பிரித்து 117 மாவட்டங்களாக்க திட்டம் தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளராக நியமிக்க பழனிசாமி முடிவு
அ.தி.மு.க.,வில் 82 மாவட்டங்களை பிரித்து 117 மாவட்டங்களாக்க திட்டம் தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளராக நியமிக்க பழனிசாமி முடிவு
ADDED : ஆக 10, 2025 04:53 AM
மதுரை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் கட்சியில் உள்ள 82 மாவட்டங்களை 117 மாவட்டங்களாக அதிகரித்து தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளராக்க அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க.,வில் தற்போதுள்ள 90 சதவீதம் மாவட்ட செயலாளர்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு இவர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்க அமைப்புச்செயலாளர் உள்ளிட்ட பதவிகள் கூடுதலாக பழனிசாமி வழங்கினார்.
தற்போது அ.தி.மு.க.,வில் 82 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் 3 செயலாளர்கள் வரை உள்ளனர். இவர்கள் 'சீனியர்கள்' என்பதால் அவர்களிடம் ஓரளவு மட்டுமே பழனிசாமியால் அதிகாரம் செய்ய முடிகிறது.
இது கட்சி வளர்ச்சியை பாதிக்கும் என உணர்ந்த அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக 2 மாவட்டங்களைஉருவாக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போதுள்ள 82 மாவட்டங்களை 117 மாவட்டங்களாக அதிகரித்து அதில் தனது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளராக்க உள்ளார்.
ஜூனியர்களுக்கு 'டார்க்கெட்' அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் 'சீனியர்கள்' என்றாலும் முன்பு போல் களப்பணிக்கு அதிகம் செல்வதில்லை. கட்சி கூட்டங்களில் மட்டுமே பங்கேற்கிறார்கள். ஜெயலலிதா இருந்தபோது இருந்த வேகம், உழைப்பு இப்போது அவர்களிடம் காணவில்லை. வயது, உடல்நிலை ஒரு காரணமாக இருக்கலாம்.
ஜெயலலிதா அமைச்சரவையில் மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர்களுடன் பழனிசாமியும் ஒரு அமைச்சராக இருந்தார். தற்போது அவர் பொதுச்செயலாளர் என்ற முறையில் அதிகாரம் செலுத்த முயன்றாலும் அதை 'சீனியர்கள்' விரும்பவில்லை. இதை பழனிசாமியும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்.
இவர்களை வைத்து சட்டசபை தேர்தலை எதிர்க்கொண்டால் மீண்டும் ஆட்சி அமைப்பது சிரமம் என உணர்ந்துள்ளார்.
இதன்காரணமாக தனது விசுவாசிகளை மாவட்ட செயலாளராக்கி களப்பணியை முடுக்கிவிட உள்ளார்.
உதாரணமாக மதுரையில் நகர், புறநகர் மேற்கு, கிழக்கு என 3 மாவட்டங்கள் உள்ளன. செயலாளராக உள்ள செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் 'சீனியர்கள்'. இந்த 3 மாவட்டங்களை 5 மாவட்டங்களாக்கும்பட்சத்தில் பழனிசாமியின் தீவிர விசுவாசியும், மருத்துவரணி இணைச்செயலாளருமான டாக்டர் சரவணன் உட்பட 2 பேர் ஜாதி அடிப்படையிலும், வசதி, மக்கள் செல்வாக்கு அடிப்படையிலும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் 'ஜூனியர்களை' களப்பணி செய்ய வைத்து கொடுத்த 'டார்க்கெட்டை' வெற்றிக்கரமாக அடைய முடியும் என பழனிசாமி கருதுகிறார்.
அவரது 4வது கட்ட சுற்றுப்பயணத்திற்கு பிறகு கட்சியில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வர உள்ளார். தேர்தலை திட்டமிட்டு தி.மு.க., கட்சி மாவட்டங்களை சேர்த்தும், கூடுதலாக்கியும் வலுப்படுத்தியது போன்று பழனிசாமியும் அ.தி.மு.க.,வை வலுப்படுத்த உள்ளார்.
இவ்வாறு கூறினார்.