/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ்ஸ்டாண்டை விரைவில் திறக்க உசிலை அ.தி.மு.க.,வினர் கோரிக்கை
/
பஸ்ஸ்டாண்டை விரைவில் திறக்க உசிலை அ.தி.மு.க.,வினர் கோரிக்கை
பஸ்ஸ்டாண்டை விரைவில் திறக்க உசிலை அ.தி.மு.க.,வினர் கோரிக்கை
பஸ்ஸ்டாண்டை விரைவில் திறக்க உசிலை அ.தி.மு.க.,வினர் கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2025 03:48 AM
உசிலம்பட்டி: 'உசிலம்பட்டியில் கட்டப்பட்டு வரும் பஸ்ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்' என, அ.தி.மு.க.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பஸ்ஸ்டாண்டை விரிவாக்கம் செய்ய 2023 ஜூலையில் பணிகள் துவங்கின. இரண்டு ஆண்டுகளாகியும் பணிகள் நிறைவு பெறவில்லை. பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அ.தி.மு.க., நகர் செயலாளர் பூமாராஜா தலைமையில் கவுன்சிலர்கள், கட்சியினர் நகராட்சி கமிஷனர் இளவரசனிடம் மனு கொடுத்தனர்.
தி.மு.க.,வின் சகுந்தலா நகராட்சித் தலைவராக இருந்த போது, பழைய பஸ்ஸ்டாண்ட் அதேஇடத்தில் இயங்கவும், வேறு இடம் தேர்வு செய்து அனைத்து வசதிகளுடன் புதிய பஸ்ஸ்டாண்ட் பணிகளை துவக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகமோ, ஊராட்சி ஒன்றியம் ஒப்படைத்த 7 ஏக்கர் சந்தை திடலுடன் மேலும் ஒரு ஏக்கர் அளவில் விரிவு படுத்தி தற்போதைய பகுதியிலேயே கட்டப்படும் என அறிவித்து பணிகளை துவக்கியது.
சந்தை திடலை நகராட்சியிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய ஒன்றியக்குழுத் தலைவர் தி.மு.க., வைச் சேர்ந்த ரஞ்சனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் விரிவாக்கப்பணிகள் தாமதமாகி வருகிறது.
நகராட்சித் தலைவராக தி.மு.க.. வைச் சேர்ந்த சகுந்தலாவை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தனர். பஸ்ஸ்டாண்ட் பணிகள் துவங்கிய சிறிது காலத்திலேயே சகுந்தலா அ.தி.மு.க., வில் இணைந்தார். பின்னர் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து நகராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதுவரை பஸ்ஸ்டாண்ட் பணிகளை விரைவுபடுத்த முயற்சி மேற்கொள்ளாத அ.தி.மு.க., தற்போது பஸ்ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.