/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ரேபிஸ் தாக்கி 26 பேர் பலி ஒதுக்கப்பட்ட ரூ.20 கோடி என்னாச்சு அ.தி.மு.க., கேள்வி

ADDED : ஜன 21, 2025 06:06 AM
மதுரை: 'தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி என்ன ஆனது' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2023ம் ஆண்டில் வெறிநாய் கடித்து 4.43 லட்சம் பேரும், 2024ல் 4.85 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரையில் 12,024 பேர் பாதிக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகளில் 26 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர்.
கடந்த 2024 - 25 நிதிநிலை அறிக்கையில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி என்ன ஆனது.
கடந்தாண்டை காட்டிலும் தற்போது கூடுதலாக தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் வெறிநாய்க்கடிக்கான மருந்துகள் இருப்பு குறைவாக உள்ளது. இன்று வெறிநாய் கடித்து பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
எப்போதும் தமிழகம் முதலிடமாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் மார்தட்டுகிறார்.
ஆனால் தமிழகத்தின் வளர்ச்சியில், மக்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை.
ஆனால் மக்கள் பாதிப்பில் தமிழகம் முன்னேற்றமாக உள்ளது. இவ்வாறு கூறினார்.