ADDED : ஏப் 26, 2026 03:34 PM
அ நிறம் | அளவு
மதுரை: அ.தி.மு.க., மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கூறியிருப்பதாவது: மதுரையில் சித்திரைத் திருவிழாவில் ஏப். 28 ல் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 29 ல் திருத்தேரோட்டம், மே 1 ல் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது.
வெயில் தாக்கம் அதிகமுள்ளதால், அதிகளவில் திரளும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம்கள், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில ஆண்டுகளாக அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் மக்கள் அச்சப்படும் அளவு நிகழ்வுகள் நடந்துள்ளன. 2022 - 2025 வரை கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி பலி, சில கொலை சம்பவங்கள் அரங்கேறின.
எனவே போதுமான போலீசார், தீயணைப்புப் படையினர், மருத்துவ குழுவை அமைப்பதுடன், மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
